2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை தலைமறைவு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். ஊர்காவற்துறைப் பகுதியில் தந்தையினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பன்னிரண்டு வயது மகள் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டுக்கு வந்த மேற்படி நபர் மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு மனைவியை வீட்டிலிருந்து துரத்தி விட்டு நித்திரையிலிருந்த மகளுடன் பாலியல் வல்லுறவு புரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக 12 வயதுச் சிறுமிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டது. இன்று காலை வீட்டுக்கு வந்த தாயார் மகளின் உடலில்   இரத்தக்கறையை கண்டு அதிர்ச்சியடைந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.  இதன் பின்னர் மகள் தங்தையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தாயாருக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்துள்ளார். மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் தலைமறைவாகியுள்ளார். இவரைத் தேடி ஊர்காவற்துறை பொலிஸார் வலை விரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .