2021 ஜூலை 31, சனிக்கிழமை

பளை வைத்தியசாலைக்கு 48 மணி நேரத்தில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதாக உறுதி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

பளை பிரதேச வைத்தியசாலைக்கு 48 மணித்தியாலத்திற்குள் அனைத்து வசதிகளும் வழங்கப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அறிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் மீள் குடியேறிய மக்கள் மற்றும் மீள் குடியேற்றம் செய்யப்படாத மக்களுடனான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் புலோப்பளை மேற்கு றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றபோது வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் மு.சந்திரகுமார் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர், அப்பகுதி கிராம அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .