2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு ரூ.700,000 நிதியுதவி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு ஏழு இலட்சம் ரூபா நிதியுதவி இலங்கை ஹற்றன் நஷனல் வங்கியின் சங்கானைக் கிளையால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அலுவலருமான இராஜேந்திரம் தியாகராசாவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இந்த நிதியை வழங்கிவைத்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உளவளத்துணை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வைத்தியத்துறை மாணவர்களுக்கு புற்றுநோய் சம்பந்தமான விழப்புணர்வை ஏற்படுத்தவும்
வெளிநாட்டு புற்றுநோய் நிபுணர்களிடையே வலைப்பின்னல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா,  புற்றுநோய் வைத்திய நிபுணர் சி.ஜெயக்குமார், காசநோய் வைத்தியப் பொறுப்பதிகாரி சி.ஜமுனானந்தா மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி உயர் அதிகாரிகள் உட்பட வைத்தியசாலை அலுவலர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .