2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கடலில் பெண்களுடன் சேஷ்டை புரிந்த 8 பேருக்கு அபராதம்

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

சாட்டிக் கடலில் தண்ணீருக்குக் கீழால் நீந்திச் சென்று பெண்களுடன் சேஷ்டை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் தலா 2ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் அவர்களை எச்சரித்து விடுதலை செய்தது.

இந்த விடயம் குறித்துத் தெரியவந்துள்ளதாவது:

கடந்த சனிக்கிழமை சாட்டிக் கடலில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த சமயம் தண்ணீருக்குக் கீழால் நீந்திச்சென்ற யாழ்.குருநகரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் அவர்களுடன் சேஷ்டை புரிந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் 8 பேரைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்திருந்தினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில், ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இடம்பெற்றது.

விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி 8 பேருக்கும் தலா 2 ஆயிரத்தி 500 ரூபா வீதம் அபராதம் வழங்கியதுடன் அவர்களை எச்சரித்து விடுதலைசெய்தார்.


  Comments - 0

  • xlntgson Wednesday, 15 September 2010 08:51 PM

    சினிமா படங்களின் தாக்கங்கள்! காதல் பண்ண கதாநாயகனும் கதாநாயகியும் தண்ணீரில் இவ்வாறான கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். ஆனால் அங்கே ஒருவரும் இருக்க மாட்டார்கள். டன் டன் டன டன ... ஜாரி ஜாரி...என்று ஒரு பாட்டு வேறு. கடைசியில் தான் அங்கே கதாநாயகனின் வாகனம் வரும். குதிரையில் இருவரும் காற்றை விட வேகமாக போவார்கள். நம் இளைஞர்களும் திரைப்படக் கதாநாயகர்களாக முயன்று தோற்று இருப்பார்கள். காதலை வெளிப்படுத்த சுலபமான வழி எதுவும் தெரியவில்லை போலும். காதல் இப்போது ஆரம்பிப்பதே தொடுவதில்தான் என்றால் பார்வை எதற்கு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .