2025 மே 03, சனிக்கிழமை

அச்சுவேலியில் மூவர் கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 24 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த காலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடான நேரம் இவர்கள் துவிச்சக்கர வண்டிகளை திருடி அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதன்போது விற்பனை செய்யப்பட்ட இடங்களில் இருந்து 11 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், தொலைக்காட்சிப் பெட்டி, இலத்திரனியல் உபகரணங்கள், கேஸ் சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X