Kogilavani / 2021 மார்ச் 19 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
வட்டுக்கோட்டைப் பகுதியில் வறிய குடும்பம் ஒனறுக்கு இராணுவத்தினரால் புதிய வீடு கட்டி கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (19) நடைபெற்றது.
தென்னிலங்கையைச் சேர்ந்த சமூக சேவையாளர் குமார் விஜயசூரிய என்பவர் இதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி பிரியந்த பெரேரா தலைமையின் கீழ், இந்த வீடு நிர்மாணித்துக்கொடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கிராம அலுவலர், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025