2025 மே 21, புதன்கிழமை

அநாதரவாகக் காணப்பட்ட 2 சைக்கிள்கள் மீட்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி - சாவகச்சேரி பகுதியில், பற்றைக்குள் அநாதரவாகக் காணப்பட்ட இரண்டு சைக்கிள்களை, சாவகச்சேரி பொலிஸார் நேற்று  (31) இரவு மீட்டுள்ளனர்.

சாவகச்சேரி செருக்கல் பிள்ளையார் கோவிலுக் அருகில் உள்ள பற்றைக் காணிக்குள் இருந்தே, இந்தச் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சைக்கிள்கள் ஆண் ஒருவருடையதும் பெண் ஒருவருடையதும் என அடையாளங்காணப்பட்டுள்ளன.

இந்தச் சைக்கிள்கள் இரண்டு நாள்களாக அநாதரவான நிலையில் காணப்பட்டதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள், அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சைக்கிள்களை கைப்பற்றியதுடன், அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .