Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஜூலை 23 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் பிரேரணையை, சபையில் எடுக்க அனுமதிக்க மாட்டேனென, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினரான அயூப் அஸ்மீன், தன்னிடம் கைத்துப்பாக்கி உள்ளதெனச் சபையில் தெரிவித்தமையானது, தனது சிறப்புரிமையை மீறும் செயலெனவும் இது தொடர்பான பிரேரணையை, அடுத்த அமர்வில் முன்மொழியவுள்ளதாகவும், அதனை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்து, அவைத்தலைவருக்கு, அனந்தி சசிதரனால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, குறித்த விடயத்தைத் தீர்மானமாக நிறைவேற்ற, சபையில் அனுமதிக்க மாட்டேனென, அனந்திக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவைத் தலைவர், இருப்பினும், குறித்த விடயம் தொடர்பில் சபையில் தன்னிலை விளக்கமளிக்கச் சந்தர்ப்பம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
14 Jul 2025
14 Jul 2025