2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்கர் உட்பட மூவரிடம் தொடர் விசாரணை முன்னெடுப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

 

யாழ்ப்பாணம் - நல்லூரடிப் பகுதியில், நேற்று முன்தினம் (23) சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடித்திருந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அமரிக்கப் பிரஜை ஒருவர் உட்பட மூவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணம் பொலிஸார், இன்று (24) தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் தமிழ்ப் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் பின் வீதியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில், சந்தேகிக்கப்படும் வகையில் நடமாடித்திரிந்ந குறித்த மூவர் தொடர்பில், பொலிஸாருக்கு அப்பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபர்களிடம் விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, குறித்த மூவரையும் கைதுசெய்த பொலிஸார், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்யான்டோவின் உத்தரவுக்கமைய, அவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .