2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அம்மாச்சி உணவகம் அடித்துடைப்பு

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபிலன் செல்வநாயகம்

காங்கேசன்துறை - கீரிமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி உணவகத்துக்குள் புகுந்த சிலர், அங்கிருந்த பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்துள்ளதுடன், கண்ணாடிகளையும் அடித்துடைத்துவிட்டுத் தப்பி சென்றுள்ளனரென, காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதோடு, இதனால், 2 இலட்சத்துக்கு அதிகமாக பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உணவகமானது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால், இவ்வருட முற்பகுதியில் திறந்துவைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், கீரிமலையில் உள்ள அம்மாச்சி உணவகத்தை நாடி, தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் உட்பட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், அதிகளவில் நாடினர்.

இதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள உணவங்களுக்கு, போதிய வருமானம் பெறமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியிலுள்ள உணவக உரிமையாளர்களுக்கும் அம்மாச்சி உணவகத்தின் நிர்வாக ஊழியார்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தொழில் போட்டி காரணமாகவே, அம்மாச்சி உணவகம் அடித்துடைக்கப்பட்டு இருக்கலாமென்று சந்தேகம் தெரிவித்துள்ள காங்கேசன்துறை பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .