2025 மே 14, புதன்கிழமை

’அரசாங்கம் தரும் வாய்ப்பை வேலையற்றப் பட்டதாரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்றப் பட்டதாரிகள், தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ளவதற்கு, அரசாங்கம் தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வேலையற்றப் பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் இறுதி திகதி,  பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, இந்தத் திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, உரிய நேரத்தில், சரியான ஒழுங்கு முறையைப் பின்பற்றி, வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு, ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .