Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 17 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
பாடசாலையில் மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அதிபர்களை வற்புறுத்தி கடிதங்கள் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் சில அரசியல்வாதிகள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் உரிய நடைமுறைகளைப் புறந்தள்ளி பிராதான அரசியல் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சிலர் தமக்கு வேண்டியவர்களின் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்குமாறு கடிதம் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் அதிபர்களுக்கு அழுத்தங்கள் வழங்குவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வடமராட்சி கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிக்குமாறு கடிதம் மூலம் கோரியிருப்பதாகவும், அங்கு பலத்த நெருக்கடி நிலை உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
உள்@ராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தங்களின் கட்சி சார்ந்த அல்லது தங்களின் கட்சிக்காக ஆட்களை திரட்டும் நோக்கோடு இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை முறைகேடா? குற்றமா? என்ற கேள்விகளையும் சமூகத்தில் உள்ளவர்கள் கேட்டு நிற்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு அரசியல் தலையீடுகளுக்கு இடம்கொடுக்காமல் நடந்து கொள்வது பாராட்டப்படவேண்டியது. அத்தகைய நடைமுறையை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
25 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
59 minute ago
1 hours ago