2025 மே 07, புதன்கிழமை

’அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியம்’

Niroshini   / 2021 ஜூன் 24 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதென, சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர்  சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நாக விகாரையில்;, நேற்று (23) மாலை, நடைபெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், பொசன் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வடக்கிலுள்ள இளைஞர்கள் பலர் சிறைகளில் உள்ளனர் எனவும் ஆகவே, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானதெனவும் கூறினார்.
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில், இதனை மேற்கொள்ளும் போதே, இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X