2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

இன்று வெப்ப நிலை குறித்து எச்சரிக்கை

Freelancer   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அதன்படி, இன்று நண்பகல்  12.09 அளவில் மாரவில, தம்பெலஸ்ஸ, மாவத்தகம, உக்குவெல மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இப்பகுதிகளின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும்.
 
இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் இலேசான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் போதியளவு நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .