Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 30 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம், அராலி பகுதியில், இரவு நேரங்களில் நடமாடும் மர்மநபர்களால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக, வலிகாமம் மேற்குப் பிரதேசசபைத் தலைவர் த.நடனேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில், மேலும் கருத்துரைத்த அவர்,
இந்த மர்மநபர்கள், கறுப்பு நிறத்திலான உடைகளை அணிந்து, முகத்துக்குக் கறுப்பு நிறச் சாயம் பூசிய வகையில் காணப்படுவதாக, அவர் தெரிவித்தார்.
இவர்கள் மக்களைத் தாக்குவதில்லையெனவும் களவு எடுப்பதில்லையெனவும் தெரிவித்த அவர், ஆனால், மக்களுடைய வீடுகள் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேரில் வந்து பார்வையிட்டிருந்த போதும், மர்மமனிதர்களின் நடமாட்டம் குறையவில்லையென, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .