Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.ராஜ்
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில், நகைகள், பணம் ஆகியவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும், மார்ச் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
அரியாலை - கனகரட்ணம் வீதியில் உள்ள வீடொன்றிலும் ஏவி வீதியில் உள்ள வீடொன்றிலும், அண்மையில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணப் பொலிஸார்,
தடயங்களின் அடிப்படையில், நேற்று (17), அரியாலையில் உள்ள வீடொன்றில் தேடுதல் நடத்தினர். இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 பவுண் 6 கிராம் தங்க நகைகளும் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், சுமார் 22 தொடக்கம் 25 வயதுடையவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் இரண்டு சந்தேகநபர்களின் உடமையிலிருந்து 1,900 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
21 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
37 minute ago
46 minute ago