Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள், அர்ப்பணிப்புடனான சிறந்த சேவையை ஆற்றுவதன் மூலமாகவே, ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா, இன்று (01) காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ், பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்ட போதும், மாணவர்கள் மனதிலும் பெற்றோர்களின் மனதிலும், நகர்ப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்றாலே சிறந்த அறிவு கிடைக்கப் பெறும் என நினைக்கின்றனர்" என அவர் தெரிவித்தார்.
எனவே, இந்நிலை மாற்றப்பட வேண்டுமாயின், கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்கள், அர்ப்பணிப்புடனான சிறந்த சேவையை வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
அத்துடன், 60ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னெடுத்துச் செல்லுகின்ற இந்த இனிய சந்தர்ப்பத்தில், ஆசிரியர்கள் அனைவரும், தங்களிடம் கல்வி கற்கின்ற மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண பரீட்சையில் அதிசிறந்த சித்திகளைப் பெறக்கூடியவர்களாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கான உறுதிமொழி பூண வேண்டுமென, அவர் மேலும் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago