2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அலைபேசி திருடியவருக்கு 2 வருட கடூழியச் சிறை

George   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டில், சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு, 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்த மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், 1,500 ரூபாய் அபராதம் விதித்து புதன்கிழமை (24) தீர்ப்பளித்தார்.

அத்துடன், சந்தேகநபரின் கைவிரல் அடையாளத்தினைப் பதிவு செய்து, கைவிரல் அடையாளங்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு நீதிவான், நீதிமன்ற பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சுன்னாகம் நகரப்பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றுக்கு வந்த 23 வயதுடைய மேற்படி நபர், அங்கு வந்திருந்த இன்னொரு நபருடைய அலைபேசியை திருடியிருந்தார். அலைபேசியை பறிகொடுத்த நபர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு, கடந்த மூன்று மாதகாலமாக தவணை அடிப்படையில் மல்லாகம் நீதிமன்றில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X