Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குள் புகுந்து, ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டித்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தாக்கிய நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜே. பொல்வின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது, மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக, மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாதவாறு, உரிய திணைக்களங்கள், கல்வி சமூகம் ஆசிரியர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். மாணவர் மீது அதிக நம்பிக்கை கொண்டு, மாணவர்களை சீராக வழிப்படுத்த கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும்போது, ஆசிரியர்கள் மீதான இத்தகைய செயற்பாடுகளை ஏற்கமுடியாது.
தற்காலத்தில் போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் காணப்படுகின்ற காரணத்தால், கழிப்பறையில் அதிக நேரம் மாணவன் காணப்பட்டதால் சந்தேகம் கொண்டு கண்டித்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என்றார்.
26 minute ago
47 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
6 hours ago
9 hours ago