Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 மார்ச் 13 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆசிரியர்களை நியமியுங்கள். இல்லை எனில் குற்றவாளிகளாகி விடுவோம்” என வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்று (13) இடம்பெற்றது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மீள் குடியேறிய பகுதிகளில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் ஆசிரிய பற்றாக்குறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அங்கு தொண்டர் ஆசிரியர்கள் வேண்டாம் என கூறி வருகின்றோம். அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாகுறையாக உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வலிகாமம் பகுதிகளில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர். அவர்களை வலி.வடக்கு பாடசாலைகளுக்கு அனுப்ப முடியும். அங்கு பாடங்களுக்கு உரிய ஆசிரியர்களே உள்ளார்கள் என காரணம் கூறப்படாமல் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அனுப்பப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு ஏதாவது இடம்பெற்றால், அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய குற்றவாளிகளாக நாங்கள் நிற்போம்” என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .