2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஆதனவரி கட்டாதவர்களுக்கு பிடியாணை

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபைக்குட்பட்ட சுழிபுரம் உப பணிமனையின் கீழ் வசிப்பவர்களில், ஆதனவரி செலுத்தாத 3 பேருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணியால் செவ்வாய்க்கிழமை (15) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதன வரியை செலுத்தாத 10 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் ஆதன வரியைச் செலுத்தவேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

ஆதனவரியை அதிக நிலுவை வைத்துள்ளவர்களுக்கு எதிராக கட்டம் கட்டமாக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வரி அறவீட்டு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .