Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 02 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா, எஸ்.ஜெகநாதன்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு எதிராக, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசுப்பிரமணியம் குறித்த முறைப்பாட்டை இன்று (02) பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இன்று (02) காலை கலந்துரையாடல் ஒன்று யாழ். நாச்சிமார் கோவிலடி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு சென்ற கட்சியின் தலைவர் சிவசுப்பிரமணியம், ஏன் தலைவருக்கும் பொருளாளருக்கும் அறிவிக்காது கலந்துரையாடலை நடாத்துகின்றீர்கள், இவ்வாறு நடப்பது தவறானது, என தெரிவித்துள்ளார். இதன்போது, ஆனந்தசங்கரி அவரை தாக்கியுள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .