Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 27 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு, சேவை இடம்பெறாமலுள்ள யாழ். புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் சேவைகள் இடம்பெற வேண்டுமென யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தினார்.
அரச நிதியை வீணாக்கும் வகையில், புதிய பஸ் நிலைய இயக்கம் இடம்பெறாமலிருப்பதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாதெனத் தெரிவித்த அவர், தனியார் மற்றும் இ.போ.ச இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் சேவைகளை ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற, வீதிப் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பது தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட, வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளிடம் இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட, வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவராசா சிவபரன், முதற்கட்டமாக தமது சேவைகளை பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்ததோடு, “தம்மைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையினரும் அங்கு சேவையில் ஈடுபடவேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடலொன்றை நடத்திய பின்னர் தமது சாதகமான நிலைப்பாட்டை தெரிவிப்பதாக இ.போ.ச வட மாகாண பிராந்திய முகாமையாளர் செல்லத்துரை குணபாலசெல்வம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
2 hours ago