Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 03 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
வியட்நாம் நாட்டுடன் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் தாமதம் காட்டுவதுடன், இணைந்து செயற்படுவது தொடர்பில் எவ்வித அக்கறையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளதாக தாம் உணரவில்லையென வியட்நாம் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பான் கீ து (Phயn மநைர வார) தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
முதன்முறையாக யாழ்;ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான வியட்நாம் தூதுவர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை (02) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்துக்கூறுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அமெரிக்காவுடன் போரிட்டு, அந்தப் போரில் வெற்றிகொண்டு அதன் பின்னர், தங்கள் நாட்டை மீள் கட்டமைத்து முன்னேறியவர்கள் அவர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு பல விடயங்கள் உள்ளன என்பதின் அடிப்படையில் எமது கலந்துரையாடல் அமைந்தது. வடக்குக்கு இதுவரை காலமும் வரமுடியாமல் போனதுக்கு பல காரணங்கள் இருந்ததாகவும், இங்கு சென்றால் பிரச்சினைகள் ஏற்படும் என கூறப்பட்டமையால் வரமுடியாமல் போனதாகவும் வியட்நாம் தூதுவர், தன்னிடம் கூறியதாக சி.வி. குறிப்பிட்டார்.
அத்துடன், போரின் பின்னர் மேற்கொள்ளும் அபிவிருத்தி இலக்குகளை நிர்ணயித்து, நிதானித்து உற்சாகத்துடன் முன்னேற வேண்டும் என்றும்; அதற்காக பலவிதமான நிபுணத்துவ ஆலோசனைகளை தருவதாகவும் கூறிய வியட்நாம் தூதுவர், தொடர்ந்து எம்முடன் தொடர்புகளைப் பேணுவதாக தெரிவித்ததார் என முதலமைச்சர் மேலும் சொன்னார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago