2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 43 பேருக்கு விளக்கமறியல்

Editorial   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

 
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த மீனவர்கள் இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலனின் வாசஸ்தலத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 31ஆம் திகதி வரை சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் 6 படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 43 இந்திய மீனவர்கள், காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள், மேலதிக விசாரணைக்காக யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .