2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

Simrith   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞர்  மீது மோட்டார் சைக்கிளில் வந்த   இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் புதன்கிழமை (03) காலை இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 தாக்குதல் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .