2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

காலி துப்பாக்கிச் சூடு: தலவாக்கலை இளைஞன் கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மீட்டியாகொட பகுதியில் திங்கட்கிழமை (01) ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில், தலவாக்கலையில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை - லிந்துலை பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச் செயலுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் அக்கரபத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 இதன்போது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவரை அன்றைய தினமே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .