2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

31 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

Editorial   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி கபில

கட்டுநாயக்காவின் சீதுவையில் அமைந்துள்ள தனியார்  அஞ்சல் மூலம் கூரியர் பொதிகளில் இருந்து ரூ. 312 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் புதன்கிழமை (03) கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த போதைப்பொருள்களில் 23,642 எக்ஸ்டசி அல்லது மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள், 01.445 கிலோகிராம் கொக்கெயின், 993 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 098 கிராம் ஐஸ் ஆகியவை அடங்கும்.

இவை ஜேர்மனி, செக் குடியரசு, சாம்பியா, அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து  இருந்து 07 கூரியர் பொதிகளின் ஊடாக கொழும்பு, பாணந்துறை, வத்தளை, ராஜகிரிய மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதியில் உள்ள போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்டன.

இந்தப் ​பொதிகளை பெற யாரும் வராததால், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இந்த முகவரிகளை ஆய்வு செய்துள்ளனர், அவை அனைத்தும் போலி முகவரிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .