2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இரணைதீவில் மீள்குடியேற அனுமதி

Editorial   / 2018 மே 15 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைதீவில் மக்கள்  தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும்  இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ்  அறிவித்துள்ளார் 

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கையின்  கடற்படை தளபதி  ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர்  இன்று (15) இரணைதீவுக்கு விஜயம் செய்தனர். 

இவர்களுடன்  கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அங்கு  சென்ற மேற்படி குழுவினர் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஏற்கனவே மக்களின் காணிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.

"மேலும் இரணைதீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும்  இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை  பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள்" எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இரணைதீவு மக்களுக்கான அடிப்படை தேவைகளை  மாவட்டச் செயலகம் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .