நடராசா கிருஸ்ணகுமார் / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - பூநகரி - இரணைதீவை விடுவிக்கக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், இரணைமாதா நகரில், 359 நாளான நாளை (23), ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கமைய, இரணைமாதா நகரில் உள்ள தேவாலயத்தில், காலை 7.30 மணிக்கு ஒன்றுக்கூடவுள்ள இரணைதீவு மக்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பின்னர், தற்போது போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரணைமாதா கடற்கரையில், கண்டன உரைகளையும் நிகழ்த்தவுள்ளனர்.
இதற்கான அழைப்பு, பொதுஅமைப்புகள், பல்கலைக்கழக அமைப்புகள் உட்பட சகல தரப்பினருக்கும் விடுக்கப்பட்டுள்ளதென, இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
1992ஆம் ஆண்டு பூர்வீக நிலமான இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், பூநகரி, முழங்காவில் இரணைமாதா நகரில் குடியேறினர். போர் நிறைவுக்கு வந்து இரணைமாதா நகரில், இரணைதீவு மக்கள் தற்போது வசித்து வந்தாலும், தமது பூர்வீக நிலமான இரணைதீவில் குடியேறவும் கடற்றொழில் புரியவும் அனுமதிக்க வேண்டும் என, கடந்த 358 நாட்களாகப் போராட்டம் நடாத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago