Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 09 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு 12,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதென, இன்று (09) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுமார் 36 அடி நீர் கொள்ளளவைக் கொண்ட பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தில் தற்போது 30 அடி 2 அங்குல தண்ணீர் மாத்திரமே உள்ளது.
இதில் குளத்தின் பாதுகாப்பு, குடிநீர் விநியோகம் மற்றும் ஆவியாகுதல் என்பவை தவிர 59 ஆயிரம் ஏக்கர் கன அடி தண்ணீரை மாத்திரமே விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும் என்பதால் குறித்த நீர் கொள்ளளவை வைத்து இவ்வாண்டு ஏறத்தாள 11 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையும் 1,500 ஏக்கர் மேட்டு நிலச் செய்கையும் மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானம் எடுப்பது தொடர்பான ஆலோசனைகட கூட்டம், கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள திட்ட முகாமைத்துவ குழு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டச் செயலாளர் தலைமையில் இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு, அதன்படி சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (N)
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago