2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இரண்டாவது தடவையாகவும் மீன் பிடித்தவருக்கு சிறை

Freelancer   / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகிய இந்திய மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதுடன் ஒருவருக்கு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டு, படகு ஒன்றும் பறிமுதல் செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் 23ஆம் திகதி எல்லை தாண்டி இலங்கை, அனலைதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர், இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஆறாவது சந்தேகநபர், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி, நிபந்தனையுடனான் விடுதலை செய்யப்பட்டிருந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஆறாவது சந்தேக நபருக்கு கடந்த முறை நிபந்தனை விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையுடன், இரண்டாவது தடவை கைது செய்யப்பட்ட குற்றச் செயலுக்கான தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நேர்ந்துள்ளது.

இதன்படி முதற்றடவைக்கான தண்டனையான ஆறு மாத காலமும், இரண்டாவது தடவையாக புரிந்த குற்றத்துக்கான தண்டனைக் காலமாக எட்டு மாத கால சிறைத் தண்ணடனை அடங்கலாக 14 மாத கால சிறைத் தண்டனையை விதித்து, ஊற்காவற்றுறை நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

மேலும், இரண்டு படகில் ஒன்றின் படகு உரிமையாளர், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட போது, படகில் இருந்துள்ளமையால் படகு பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X