2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இராணுவத்தினர் களமிறக்கம்

Janu   / 2024 ஜனவரி 02 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகமாக காணப்படும்  பிரதேச செயலக பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு நோய் பரவலை  கட்டுப்படுத்தும் வகையில், வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி திங்கட்கிழமை (01)  முதல் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்களும் கடும் நடவடிக்கை எடுக்கவும் பணிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை குறித்த நடவடிக்கையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 

எம்.றொசாந்த்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X