2025 மே 14, புதன்கிழமை

இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

வல்லை - அராலி வீதியின் அச்சுவேலி, தென்மூலை பகுதியில், நேற்று (24) மாலை இடம்பெற்ற விபத்தில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பலாலியில் இருந்து அச்சுவேலி நோக்கி வந்த இராணுவ கெப் வாகனமும் அச்சுவேலியில் இருந்து பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பணயித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தையடுத்து, இராணுவ வாகன சாரதி, அச்சுவேலி போக்குவரத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .