2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இராணுவ வீரர்களுக்கிடையில் மோதல்; ஒருவருக்கு காது அறுக்கப்பட்டது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று வியாழக்கிழமை (03) இராணுவ சிப்பாய்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்ற சிப்பாய், காது அறுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இருவர் சிறு காயங்களுடன் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்று சிப்பாய்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்ததன் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .