2025 மே 01, வியாழக்கிழமை

இறைச்சி விற்பனைக்கு தடை

Niroshini   / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

அதாவது, வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே, கோழிகளை உரித்து இறைச்சியாக்கி விற்பனை செய்ய முடியும் எனவும் சபையின் ஆளுகைக்குட்பட்ட ஏனைய பகுதிகளில் உரித்து இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்

இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இது, நடைமுறைக்கு வரும் எனவும் மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .