Princiya Dixci / 2022 ஜூலை 21 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்
கடல்மார்க்கமாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 575 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மீட்ட இலங்கைக் கடற்படையினர், இருவரைக் கைதுசெய்துள்ளனர்.
கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர் எனவும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் படகு என்பன காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களையும் கஞ்சா மற்றும் படகையும், காங்கேசன்துறை பொலிஸார் ஊடக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago