Freelancer / 2022 ஜூலை 18 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
இளவாலை - பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள் வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 20, 21 வயதான இருவரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளை அவர்களிடம் முன்னெடுத்து வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். (R)
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago