2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இளைஞனின் உயிரை பலியெடுத்த ஐஸ்

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

நெடுந்தீவில் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குணாராசா தனுஷன் (வயது 25) என்பவரது சடலம் நேற்றைய தினம் இரவு மீட்கப்பட்டது. 

அவரது அம்மம்மா வீட்டில் தங்கியிருந்து நேற்றையதினம் அதிகாலை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவரை மாலை வரை காணமையால் தேடியபோதே ஆட்களற்ற வீட்டில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டதிலேயே இத்தகவல் வெளியாகியானதாகத் தெரிவிக்கப்பட்டது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X