2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இளைஞரை தாக்கியவருக்கு பிணை

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரணி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துக்கு உதவினார் என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டு இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றத்துக்காக இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வரணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துக்கு தகவல் வழங்கினார் என இளைஞர் ஒருவரை, ஊர் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வீடு புகுந்து தாக்கி, மீசாலையில் இருந்து வரணி இயற்றாலை வரை அடித்து வீதி வீதியாக நடக்குமாறு அடித்து சித்திரவதை புரிந்திருந்தனர்.

அது தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை கடும் காயங்களுடன் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இளைஞன் மாற்றப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்ற போது, தனது வீட்டுக்கு முன்னால் வசிக்கும் நபர் ஒருவரின் தலைமையில் வந்த இளைஞர்களே தம் மீது தாக்குதல் நடாத்தினார் என வாக்கு மூலம் அளித்துள்ளார்.

குறித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பொலிஸார், தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் வீட்டுக்கு முன்னால் வசிக்கும் இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். அதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X