2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச நடத்துநர்களை மீள சேவையில் இணைக்க உத்தரவு

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நடத்துநர்களாக கடமையாற்றிய போது பணக்கையாடலில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட ஐவரை மீள சேவையில் இணைக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளை பிறப்பித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் நடத்துனர்களாக கடமையாற்றிய ஐவர் பயணிகளில் பற்றுசீட்டில் மோசடி செய்து, பண கையாடலில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்டு சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அது தொடர்பில், சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் தொழில் நியாய சபையில் முறையிட்டு இருந்தனர். அது தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் அவர்களை சேவையில் இணைத்து கொள்ளுமாறு பணித்திருந்தமைக்கு எதிராக, மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட மனு மீதான விசாரணை இன்று (02) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி,

“நடத்துநராக கடமையாற்றிய வேளையில் பயணபற்று சீட்டு பரிசோதகர்கள் பற்றுசீட்டுக்களை பரிசோதித்தபோது, ஒருவரிடம் மேலதிக பணம் காணப்பட்டது. ஒருவரிடம் பணம் குறைவாக காணப்பட்டது. அரச பணத்தை கையாடல் செய்வது குற்றமாகும். அது பெருந்தொகையாக இருக்க வேண்டும் என இல்லை 30 சதமாக இருந்தாலும் குற்றமே. இந்த சம்பவத்தை பாரதூரமான துர்நடத்தையாக கருதாமல் ஒரு தவறாக இதனை கருதி பணக்கையாடலில் ஈடுபட்டவர்களை கடுமையாக எச்சரித்து மன்றானது அவர்கள்  சேவையில் தொடர்ந்து நீடிக்க அனுமதி அளிக்கின்றது. 

அவர்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால பகுதியையும் சேவை காலமாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஆனாலும் இடைநிறுத்தப்பட்ட கால பகுதிக்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படத் தேவையில்லை. அத்துடன் அவர்களுக்கு எந்த விதமான நட்டஈடும் கொடுக்க வேண்டியதில்லை” என நீதிபதி கட்டளையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X