2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உடனடி சுகாதார அபிவிருத்திக்கு 255 மில்லியன் தேவை

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடனடி சுகாதாரத்துறை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு  255 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த யுத்தம் காரணமாக முழுமையாக அழிக்கப்பட்;ட முல்லைத்தீவு மாவட்டத்தின் கட்டடங்கள் தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாவட்டத்தின் சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்கக்கூடிய வகையில் வைத்தியசாலைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மேலும் 1,000 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது. இதனைவிட 38 உடனடி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள 255 மில்லியன் ரூபாய் தேவையாகவுள்ளது.

அதாவது, கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 13 வேலைத்திட்டங்களுக்கு 162.5 மில்லியன் ரூபாயும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 08 வேலைத்திட்டங்களுக்கு 34.5 மில்லியன் ரூபாயும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 02 வேலைத்திட்டங்களுக்கு 4.5 மில்லியன் ரூபாயும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 09 வேலைத்திட்டங்களுக்கு 37.5 மில்லியன் ரூபாயும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 03 வேலைத்திட்டங்களுக்கு 6.5 மில்லியன் ரூபாயும் வெலிஒயா பிரதேச செயலர் பிரிவில் 03 வேலைத்திட்டங்களுக்கு 9.5 மில்லியன் ரூபாயும் தேவையாகவுள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .