2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘உடுவில் முடக்கம் தளர்த்தப்படுகிறது’

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த் 

யாழ். மாவட்ட உடுவில் பிரதேச செயலகத்துக்குட்படட பகுதிகள்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது என  வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அது குறித்து அவர் அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, 

“உடுவில் பிரதேச செயலக பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பர்,

மருதனார்மடம் சந்தை அதனைச்சூழவுள்ள பகுதி வர்த்தக நிலையங்கள் இரு வாரம் இயங்காது.

தெல்லிப்பளை மற்றும் உடுவில் கோட்டப் பாடசாலைகள் இரு வாரம் இயங்காது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகள் நேற்று முதல் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்நிலையில், இன்று உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன. தற்போது நாளை முதல் முடக்கம் தளர்த்த படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X