2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ஹட்டனில் மூன்றரை கோடி பணமோசடி

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மூன்றரை கோடி ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி பிரசாத் வீரசேகர தெரிவித்தார்.

டுபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான வேலை வேலைவாய்ப்பு காணப்படுவதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 12 இலட்சம் தொடக்கம் 15 இலட்சம் வரையிலான தொகையினை பெற்றுள்ளார்.  

இவர்களிடம் இருந்து சுமார் மூன்றரை  கோடி ரூபாய் பணத்தை குறித்த சந்தேக நபர் பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் உள்ள ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தில் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதில் 12 பேர் டுபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.   

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 49 பேரும் ஹட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி பிரசாத் வீரசேகர அவர்களை சந்தித்தனர் .

அதற்கு பதில் வழங்கிய பொலிஸ் அதிகாரி பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முறைப்பாடுகளும்  பொலிஸாரின் ஊடாக தீர்வு  வழங்கப்படும் இது குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை எனவும் பிரதான சந்தேக நபரை நாங்கள் கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

எஸ் சதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .