Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர், சி.ஐ.டி எனக் கூறி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஒன்றில் வெளியாகிய செய்தியை நீக்குமாறு கூறியே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜீவசங்கரி என்ற நபரே இவ்வாறு ஊடகவியலாளரை இன்று (13) காலை 7.25 மணியளவில் பருத்தித்துறை வீதியில் உள்ள சட்டநாதர் சிவன் கோவில் பகுதியில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது, அந்த நபர், “தான் வல்வெட்டித்துறை சி.ஐ.டி என்றும், ஆவா குழுவிடம் ஒரு சொல் சொன்னால், ஆவா குழுவினர் துண்டு துண்டாக வெட்டி போடுவார்கள்” என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago