Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினருக்கும், கிளிநொச்சி ஊடகவியலாளர்களுக்கு இடையில், கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று (11) காலை விசேட நட்புறவுக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, தமிழ் - சிங்கள ஊடகவியலாளர்களுக்கு இடையிலான நட்புறவை அதிகரித்தல், ஊடகத் தொழிற்றுறைசார் விடயங்களை மேம்படுத்தல், இன நல்லிணக்கத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, இளம் ஊடகவியலாளர்களுக்கு 2ஆம் மொழி அறிவை மேம்படுத்தல், தமிழ், சிங்கள, இஸ்லாமிய ஊடகவியலாளர்களை தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நட்புறவை வளர்த்தல், தமிழ் - சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அடையாளம் கண்டு, இரு தரப்பினருக்குமான உண்மை நிலையை தெளிவுபடுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் ஆராயப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை, பெண் ஊடகவியலாளர்களின் தொழிற்றுறைசார் சவால்களை அடையாளம் கண்டு, அவர்களையும் ஊடகத் துறையில் செயற்படுதவத்றகான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானம் எட்டப்பட்டது.
அரசியல், இனப் பிரச்சினைகளைக் கடந்து, இன, மத ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக நல்லதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதன் ஊடாக நாட்டில் அனைத்து இனங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்காக அத்திபாரத்தை ஊடகவியலாளர்கள் மத்தியிலிருந்து ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வெளிக்கொணரப்பட்டது.
14 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
1 hours ago