2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கை சாதகப்படுத்திய கொள்ளையர்கள்

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

 

பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில், வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று, தென்மராட்சி – கோவிலாக்கண்டியில், திங்கட்கிழமை (22) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

நள்ளிரவு 12.30 மணியளவில், கோவிலாக்கண்டியில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டிலிருந்த மூவரையும் மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் அலுமாரியிலிருந்த நகை என மொத்தம் 28 பவுண் தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை, நவாலி - பிரசாத் லேனில் உள்ள வீடொன்றில், நேற்று  (23) 16 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென, பொலிஸார் இன்று (24) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .