2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு நேற்று திங்கட்கிழமை (28) மூன்று பஸ்களில் பொலிஸார் அழைத்துவரப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை, நேற்று இடம்பெற்ற நிலையிலேயே இந்த விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

வழமை போன்று அல்லாமல் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனைவிட விசேட அதிரடிப்படையினரும் வழமைபோன்று தங்களது கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .