Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 ஜனவரி 14 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
“காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள், உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம். எங்களுக்கான எந்தத் தீர்வும் இதுவரை இல்லை. எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்” என, கிளிநொச்சியில் 329ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஏ9 பிரதான வீதிக்கருகில் தொடர்ச்சியாக 329ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள், இன்று(14) தைப்பொங்கல் நாளன்றும் போராட்டக் கொட்டகைக்குள் நல்ல தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். இந்நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“தங்களின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்தாலும், எங்களை வீதியில் இறக்கி போராட வைத்தவர்கள் வீடுகளில் இன்று பொங்கி மகிழ்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடத்துக்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துத் தீர்வை பெற்றுத் தரவேண்டியவர்கள், அரசாங்கத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்குகின்றனர்.
“அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவு தேவைப்படுகின்ற போது, எங்கள் பிரததிநிதிகள் நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வருகின்றனர். நாட்டுக்குள் மட்டுமன்றி நாட்டுக்கு வெளியேச் சென்றும் எங்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.
எங்களுக்காக பேசுவார்கள் என நம்பிய பிரதிநிதிகள் அரசாங்கத்துக்காக மேடையேறி பேசுகின்றார்கள், வாதாடுகின்றர்கள். இவற்றுக்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்” எனத் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago