2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

Simrith   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியாஞின் நகரில் நடந்தது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து ரஷ்யா - இந்தியா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு இருவரும் ஒன்றாக காரில் சென்றனர். அது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மோடி, “இந்திய - ரஷ்ய இருதரப்பு ஆலோசனைக்காக நானும், புதினும் ஒரே காரில் பயணிக்கிறோம். அவருடனான ஆலோசனைகள் எப்போதுமே ஆழமான புரிதலைக் கொண்டவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்தது. அதற்கு ரஷ்யாவுடனான நட்பை, அங்கிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டியது. இந்நிலையில், ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஹாங்கி எல்-5’ சொகுசு கார்: ஏற்கெனவே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘ஹாங்கி எல்-5’ என்ற அதிநவீன சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா வந்துள்ள பிரதமர் மோடியின் பயணத்துக்கு சீன அதிபர் பயன்படுத்தும் ‘ஹாங்கி எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் உட்பட 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் கார் வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X